×

ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம்: கங்குலி தகவல்

மும்பை: ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார். கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கங்குலி தகவல் தெரிவித்தார். கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மே 30ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. …

The post ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம்: கங்குலி தகவல் appeared first on Dinakaran.

Tags : IPL series ,India ,Ganguli ,Mumbai ,BCCI ,president ,IPL ,Corona ,Dinakaran ,
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...